தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தங்க செயினை ஒப்படைத்த மாணவிகளுக்கு பாராட்டு

தங்க செயினை ஒப்படைத்த மாணவிகளுக்கு பாராட்டு

தங்க செயினை ஒப்படைத்த மாணவிகளுக்கு பாராட்டு


UPDATED : ஆக 19, 2023 12:00 AM

ADDED : ஆக 19, 2023 10:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 19, 2023 12:00 AM ADDED : ஆக 19, 2023 10:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நரிக்குடி:
நரிக்குடி பஸ் ஸ்டாண்டில் கீழே கிடந்த தங்கச் செயினை கண்டெடுத்த மாணவிகள் போலீசாரிடம் கொடுத்து உரியவரிடம் ஒப்படைத்தனர்.மாணவிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மறைக்குளத்தைச் சேர்ந்தவர் சசிகலா. இவர் நரிக்குடி உலக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று காலை நரிக்குடி பஸ் ஸ்டாண்டில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது கைப்பையில் வைத்திருந்த நகைகளை சரி பார்த்து போது, பஸ் வரவே அவசரத்தில் 2.5 பவுன் தங்கச் செயினை தவறவிட்டார். இதை கவனிக்காத ஆசிரியை பள்ளியில் சென்று பார்த்த போது செயின் காணாமல் போனது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ. 80 ஆயிரம். பஸ் ஸ்டாண்டில் தேடிப் பார்த்து கிடைக்கவில்லை. நரிக்குடி போலீசில் புகார்தெரிவித்தார். இந்நிலையில் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் மோகனா ஸ்ரீ, சபர்னா, தேவிகா சேர்ந்து பள்ளிக்கு வரும் வழியில் பஸ் ஸ்டாண்டில் கிடந்த தங்க செயினை கண்டெடுத்து தலைமை ஆசிரியர் சோணைமுத்துவிடம் கொடுத்தனர். அவர் நரிக்குடி போலீசிற்கு மாணவிகளை அழைத்துச் சென்று தங்க செயினை ஒப்படைத்தார். ஏற்கனவே உலக்குடி தமிழ் ஆசிரியை புகார் கொடுத்திருந்த நிலையில் அவரை வரவழைத்து அடையாளங்கள் கேட்டனர். மாணவிகள் கண்டெடுத்த தங்கச் செயின் அவருடையது தான் என தெரிந்தது. ஆசிரியையிடம் மாணவிகளே ஒப்படைத்தனர். ஆசிரியை நன்றி தெரிவித்தார். மாணவிகளின் செயலை கண்டு போலீசார், பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us