UPDATED : ஆக 19, 2023 12:00 AM
ADDED : ஆக 19, 2023 10:17 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்:
விருதுநகரில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ரெடிமேட் ஆடை உற்பத்தி செய்ய விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது:
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக 10 நபர்கள் கொண்ட குழுவாக ரெடிமேட் ஆடை உற்பத்தி செய்ய அமைக்க தகுதியான குழுக்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி அளிக்கப்படுகிறது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை. 10 நபர்களுக்கும் தையல் தெரிந்திருத்தல் அவசியம். ஆர்வமுள்ளோர் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று பயன் அடையலாம், என்றார்.
