குழந்தைகள் அறிவியல் மாநாடு: ஆசிரியர்களுக்கு பயிற்சி
குழந்தைகள் அறிவியல் மாநாடு: ஆசிரியர்களுக்கு பயிற்சி
UPDATED : ஆக 20, 2023 12:00 AM
ADDED : ஆக 20, 2023 10:49 AM
நாமக்கல்:
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், 31வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு-2023 வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில், நடந்தது.அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் துரைசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கைலாசம் வரவேற்றார். முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி வழிகாட்டுதல்படி நடந்த இம்முகாமில், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு குறித்தும், சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியத்திற்கான தொழில் நுட்ப கண்டுபிடிப்பு, திட்ட ஆலோசனைகள் குறித்து விளக்கப்பட்டது.அதில், ஒருங்கிணைப்பாளர் கண்ணன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் செல்வராஜூ, மாவட்ட பொருளாளர் ரகோத்தமன், கல்வி ஒருங்கிணைப்பாளர் ராஜா, தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரகுநாத் ஆகியோர் பங்கேற்று விளக்கினர். மாவட்டம் முழுவதும் இருந்து, ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
