UPDATED : ஆக 24, 2023 12:00 AM
ADDED : ஆக 24, 2023 09:25 AM
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், பள்ளி செல்லா மற்றும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான கணக்கெடுப்பு பணி, ஆக., 1 முதல், நடந்துவருகிறது.அதன்படி, காஞ்சிபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட இருளர் குடியிருப்புகளான தேனம்பாக்கம், வெள்ளகுளம் பகுதிகளில் கணக்கெடுப்பு பணி நடந்தது. இதில், பள்ளி செல்லாத பார்த்திபன் என்ற மாணவர் கண்டறியப்பட்டு, தேனம்பாக்கம் நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்க்கப்பட்டார். கணக்கெடுப்பில், காஞ்சிபுரம் மாவட்ட உதவி திட்ட அலுவலர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், ஹேண்ட் இன் ஹேண்ட் ஆகிய துறையை சார்ந்தவர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் பங்கேற்றனர்.கணக்கெடுப்பின் போது, அப்பகுதியில் உள்ள ஐந்து வயது பூர்த்தி அடைந்த அனைவரும் ஒன்றாம் வகுப்பு வகுப்பில் சேர்ந்துள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டது. குழந்தை திருமணத்தால் ஏற்படும் விளைவுகள் மற்றும் கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
