UPDATED : ஆக 25, 2023 12:00 AM
ADDED : ஆக 25, 2023 11:13 AM
சேலம்:
போலீஸ் எஸ்.ஐ. பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு நாளை தொடங்க உள்ள நிலையில் 20 பேருக்கு ஒரு சிசிடிவி கேமரா பொருத்தி அதிகாரிகள் கண்காணிக்க உள்ளனர்.தமிழக போலீசில் 621 எஸ்.ஐ. தீயணைப்பு துறையில் 129 என 750 காலி இடங்களுக்கு நாளை எழுத்துத்தேர்வு தொடங்கி இரு நாட்கள் நடக்க உள்ளது. 33 மாவட்டங்களில் 152 மையங்களில் நடக்க உள்ள இத்தேர்வில் பங்கேற்க 1லட்சத்து 86 ஆயிரத்து 722 பேருக்கு சீருடை பணியாளர் தேர்வாணையம் அழைப்பு கடிதம் அனுப்பி உள்ளது. சேலம் மாவட்ட போலீஸ் சார்பில் 7 மையங்களில் நடக்கும் தேர்வில் 8095 பேருக்கும் சேலம் மாநகர போலீஸ் சார்பில் சோனா தொழில்நுட்ப கல்லுாரி வளாகத்தில் நடக்கும் மையத்துக்கு 2400 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.நாளை நடக்க உள்ள தேர்வில் 20 பேருக்கு ஒரு சிசிடிவி கேமரா கட்டாயம் என தேர்வாணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தேர்வர்களை கண்காணிக்க மட்டும் 9336 பிற இடங்களில் 664 என 10000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தேர்வு எழுதுபவர்களை அந்தந்த மாவட்ட எஸ்.பி. போலீஸ் கமிஷனர் சீருடை பணியாளர் தேர்வாணைய உயரதிகாரிகள் தங்கள் இருக்கும் இடங்களில் இருந்தே கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில் போலீஸ் பணி எழுத்து தேர்வு நடக்கும் அறைகளில் வழக்கமாக ஒரு கேமரா பொருத்தி கண்காணிப்பு பணியில் அறை அளவுக்கேற்ப 1 முதல் 3 அதிகாரிகள் நியமிக்கப்படுவர். நாளை பொது பிரிவினர் 27ல் துறை சார்ந்தவர்களுக்கு நடக்கும் தேர்வு அறைகளில் அளவுக்கேற்ப 2 முதல் 5 அதிகாரிகள் வரை நியமிக்கப்படுவர். அத்துடன் 20 பேருக்கு ஒரு கேமரா பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
