UPDATED : ஆக 25, 2023 12:00 AM
ADDED : ஆக 25, 2023 11:12 AM
சென்னை:
அரசு ஊழியர்களின் குழந்தைகளின் உயர்கல்விக்கு வழங்கப்படும் கல்வி முன்பணத்தை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தொகுதி சி மற்றும் டி ஊழியர்களுக்கு ஒரு மாத அடிப்படை ஊதியத்திற்கு சமமான தொகை அல்லது அரசு பரிந்துரைத்துள்ள வரம்புகளில் எது அதிகமோ அத்தொகை அனுமதிக்கப்படும். தொகுதி ஏ மற்றும் பி அலுவலர்களுக்கு ஒரு மாத அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம் அல்லது அரசு பரிந்துரைத்த வரம்புகளில் எது அதிகமோ அத்தொகை அனுமதிக்கப்படும். அரசு ஊழியர்களின் குழந்தைகள் தொழில்முறை கல்வி கற்க முன்பணமாக 2500 ரூபாய் வழங்கப்பட்ட நிலையில் தற்போது 50000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் படிக்க வழங்கப்பட்ட 2000 மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிக்கு வழங்கப்பட்ட 1000 ரூபாய் தற்போது 25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட தொகை நடப்பு கல்வி ஆண்டில் இருந்து வழங்கப்படும்.
