தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விக்ரம் லேண்டர்: பெயர் காரணம்

விக்ரம் லேண்டர்: பெயர் காரணம்

விக்ரம் லேண்டர்: பெயர் காரணம்


UPDATED : ஆக 25, 2023 12:00 AM

ADDED : ஆக 25, 2023 11:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 25, 2023 12:00 AM ADDED : ஆக 25, 2023 11:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர், நம் நாடு விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்கா, சீனா, ரஷ்யாவுக்கு நிகராக பல விண்வெளி ஆய்வுகளை மேற்கொண்டு உலக கவனம் பெற்றது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மற்றும் அணுஆயுத சோதனைகள் உலக விஞ்ஞான வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ளன. சமீபத்தில் ஏவப்பட்ட சந்திரயான் 3 இஸ்ரோவின் வியத்தகு சாதனைகளுள் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இஸ்ரோவின் வளர்ச்சிக்கு வித்திட்ட மூத்த விஞ்ஞானி விக்ரம் சாராபாய். இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தையாகக் கருதப்படும் விக்ரம் சாராபாய் குறித்த முக்கியத் தகவல்களை அறிவோமா?விக்ரம் அம்பாலா சாராபாய், குஜராத்தின் அகமதாபாத்தில் 1919 ஆம் ஆண்டு ஆக.,12 அன்று காந்திய சுதந்திர போராட்ட வீரர் மற்றும் தொழிலதிபர் அம்பாலா சாராபாயின் மகனாகப் பிறந்தார். செல்வந்தர்களான சாராபாய் வம்சாவளினர் காலாகாலமாக தொழில்துறையில் ஈடுபட்டிருந்தனர். ஜைன சமூகத்தில் பிறந்து வளர்ந்த விக்ரம், சிறுவயது முதலே இயற்பியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சிப் பாடங்களில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலை.,யில் பட்டம்பெற்றார். 1947 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர் காஸ்மிக் ஒளி ஆராய்ச்சிக்காக பிரத்யேகமான ஃபிஸிகல் ரிசர்ச் லேப்ரெட்ரியையும் இஸ்ரோவையும் உருவாக்கினார்.இன்று பொருளாதார உயர்கல்வியில் உலகளவில் சிறந்துவிளங்கும் அகமதாபாத் ஐஐஎம் கல்லூரியை உருவாக்க வழிவகுத்தார். 1975 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவின் உருவாக்கத்துக்கு மூளையாக செயல்பட்டவர் விக்ரம். வளிமண்ட மேல்பகுதி ஆராய்ச்சி, ரேடியோ கதிர்கள் குறித்த இயற்பியல் ஆராய்ச்சி ஆகியவற்றைத் துவக்கிவைத்தார். இன்று இந்தியாவின் செயற்கைக்கோள்கள், ராக்கெட்கள், ஏவுகணைகள் ஏவுவதற்கு விக்ரமின் முதற்கட்ட ஆராய்ச்சிகளே அடித்தளமிட்டன. பிரபல இஸ்ரோ விஞ்ஞானிகளான நம்பி நாராயணன், அப்துல் கலாம் ஆகியோரது ஆசானாகத் திகழ்ந்தார்.1942 ஆம் ஆண்டு மிருணாளினி என்கிற நடனக் கலைஞரை மணந்த விக்ரமுக்கு மல்லிகா என்கிற மகளும் கார்திகேயா என்கிற மகனும் உள்ளனர். 1971 ஆம் ஆண்டு திருவனந்தபுரம் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய விக்ரமுக்கு அப்போது 52 வயது. அப்துல் கலாமுடன் தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருக்கும்போது திடீர் மாரடைப்பால் மயங்கி சரிந்தார். சாலிட் ஸ்டேட் வியகிள் ராக்கெட் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவர், அகால மரணம் அடைந்தது இஸ்ரோவின் பேரிழப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.திருவனந்தபுர ஆராய்ச்சி மையத்துக்கு அவரது நினைவாக விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டர் எனப் பெயரிடப்பட்டது. அவரது உருவப்படம் கொண்ட தபால்தலை மூலம் அப்போதைய மத்திய காங்., அரசு அவருக்கு மரியாதை செய்தது. 1966 ஆம் ஆண்டு அவருக்கு பத்மபூஷன் விருது அளிக்கப்பட்ட நிலையில் அவரது மறைவுக்குப் பின்னர் 1972 ஆம் ஆண்டு பத்மவிபூஷன் விருதும் வழங்கப்பட்டது. சந்திரயான் 3 மிஷனின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியதை அடுத்து இந்த வெற்றியை இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் சாராபாய்க்கு அர்ப்பணித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us