தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரபிந்தோ சொசைட்டியுடன் புதுச்சேரி பல்கலை ஒப்பந்தம்

அரபிந்தோ சொசைட்டியுடன் புதுச்சேரி பல்கலை ஒப்பந்தம்

அரபிந்தோ சொசைட்டியுடன் புதுச்சேரி பல்கலை ஒப்பந்தம்


UPDATED : ஆக 31, 2023 12:00 AM

ADDED : ஆக 31, 2023 07:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 31, 2023 12:00 AM ADDED : ஆக 31, 2023 07:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
புதுச்சேரி பல்கலை மற்றும் அரபிந்தோ சொசைட்டி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.நிகழ்ச்சிக்கு, துணை வேந்தர் குர்மீத்சிங் தலைமை தாங்கினார். பதிவாளர் ரஜ்னீஷ் பூடானி, அரபிந்தோ சொசைட்டி தலைவர் பிரதீப் நரங், சர்வதேச உறவுகள் பேராசிரியர் சுப்ரமணியம் ராஜி, புரிந்துணர்வு ஒப்பந்த ஒருங்கிணைப்பாளர் ரிச்சா திவாரி ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், மாணவர்களுக்கான பயிற்சிகள், பயிலரங்கு, கருத்தரங்கு, கலந்துரையாடல், குழு மாற்றத்துக்கான வழிகள் மேற்கொள்ளப்படும். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட படிப்புகள், ஆய்வு திட்டங்களை தொடங்கவும், அரவிந்தரின் அரசியல் சிந்தனை மற்றும் ஒருங்கிணைந்த கல்வி கொள்கைகள் குறித்த சிறப்பு படிப்புகள் தொடங்க முடியும். நிகழ்ச்சியில் பேராசிரி யர் தரணிக்கரசு, நிதி அலுவலர் லாசர், புல முதன்மையர்கள், துணை தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us