தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை திட்டத்தில் மோசடி!

சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை திட்டத்தில் மோசடி!

சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை திட்டத்தில் மோசடி!


UPDATED : ஆக 31, 2023 12:00 AM

ADDED : ஆக 31, 2023 10:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 31, 2023 12:00 AM ADDED : ஆக 31, 2023 10:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
பள்ளிகளே இல்லாத நிலையில், சிறுபான்மையினர் படிக்காத நிலையில், மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் மிகப் பெரும் மோசடி நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. உரிய முறையில் கண்காணிப்பு இல்லாததால் இந்த மோசடி 21 மாநிலங்களில் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. இடைத்தரகர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் என, பல நிலைகளில் இதில் கொள்ளையடித்து வந்தனர். இதை தடுக்கும் வகையில், திட்டப் பயன்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. ஆனால், இதிலும் சிலர் கூட்டு சேர்ந்து கொள்ளைஅடிக்கின்றனர்.பயனாளிகள்:
இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக, மத்திய அரசின் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தில் நடந்துள்ள மோசடியை குறிப்பிடலாம். பள்ளி மற்றும் கல்லுாரி யில் படிக்கும் முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர், ஜெயின், பவுத்தம் மற்றும் பார்சி ஆகிய சிறுபான்மையினருக்கு உதவும் வகையில், மூன்று வகையான கல்வி உதவித்தொகை திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.இது, அந்தந்த மாநிலங்கள் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. இதற்காக பள்ளிகள் பதிவு செய்ய வேண்டும். அதன்பின், அந்தப் பள்ளி யில் படிக்கும் மாணவ - மாணவியரின் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். இவை உரிய முறையில் கண்காணிக்கப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு, பயனாளிகளுக்கு கல்வி உதவித் தொகையை மத்திய அரசு வழங்குகிறது. ஆனால், இதில் மிகப் பெரும் மோசடி நடந்துள்ளது சமீபத்தில் தெரியவந்துள்ளது.புகார்களின் அடிப்படையில், இது குறித்து ஆய்வு செய்யும்படி, தேசிய செயல்முறை பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக, மூன்றாம் தரப்பினர் வாயிலாக ஆய்வு செய்யப்பட்டது. இதில், 1,572 பள்ளிகள் மீது சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் பெரும் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. நாடு முழுதும், 21 மாநிலங்களில் இருந்து பதிவு செய்யப்பட்ட, 830 பள்ளிகள் உண்மையில் செயல்படாதவை என்பது தெரியவந்துள்ளது. அதாவது பள்ளிகள் இல்லாத நிலையில், போலி பெயர்களில் பள்ளிகள் இருப்பதாக கணக்கு காட்டியுள்ளனர்.விண்ணப்பங்கள்:
போலி பெயர்களில் பள்ளிகளை உருவாக்கி, அதில் மாணவர்கள் படிப்பதாக கணக்கு காட்டி, கல்வி உதவித்தொகை சுருட்டப்பட்டுள்ளது. சில பள்ளி ஊழியர்கள், வங்கி அதிகாரிகள், சைபர்கபே எனப்படும் கம்ப்யூட்டர் சேவை வழங்கும் கடைகள் உள்ளிட்டவை இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த மோசடிக்காக தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை, முதலில் பள்ளியைச் சேர்ந்த ஒரு பொறுப்பு அதிகாரி ஆய்வு செய்ய வேண்டும். அதன்பின், மாவட்ட பொறுப்பு அதிகாரி அதை ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், எவ்வித ஆய்வுகளும் செய்யப்படாமல், கண்மூடித்தனமாக, இந்த விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.சத்தீஸ்கரின் கான்கெர் பகுதியில் ஒரு குறிப்பிட்ட அரசுப் பள்ளி இயங்குகிறது. இது, பழங்குடியின சிறுமியருக்கான பள்ளி. ஆனால், இது சிறுபான்மையினர் பள்ளி என்ற பெயரில் உதவித் தொகை பெறப்பட்டுள்ளது. பீஹாரில் ஒரு குறிப்பிட்ட பள்ளியின் பொறுப்பு அதிகாரியாக, சைபர்கபே உரிமையாளர் ஒருவர் பதிவு செய்துள்ளார். இவர் மாணவர்கள் பெயரில் போலியாக பல கணக்குகளை உருவாக்கி, கல்வி உதவித் தொகையை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.இந்த சம்பவங்கள் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த மோசடி தொடர்பாக முழுமையான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. போலிகளை களையெடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us