மாநில அரசின் கல்வி கொள்கை இறுதி வடிவத்திற்கு ஒப்புதல்
மாநில அரசின் கல்வி கொள்கை இறுதி வடிவத்திற்கு ஒப்புதல்
UPDATED : ஆக 31, 2023 12:00 AM
ADDED : ஆக 31, 2023 10:52 AM
அ நிறம் | அளவு
மாநில அளவில் கல்வி கொள்கை அமைக்க, கடந்த ஆண்டு மே மாதம், ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் உயர்மட்டக்குழுவை அமைத்தது.இந்தக் குழு, மாநில கல்வி கொள்கையை தாக்கல் செய்வதற்கான அவகாசம் அடுத்த மாதம் முடிகிறது. இந்நிலையில், மாநில கல்வி கொள்கையை இறுதி செய்வதற்கான குழு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. கல்வி கொள்கையின் இறுதி வடிவத்துக்கு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தனர். அதேநேரம், கல்வி கொள்கை ஆங்கிலத்தில் இருப்பதால், தமிழில் மொழி பெயர்க்கும் பணிகளை விரைந்து முடித்து, அடுத்த மாதம் அரசிடம் தாக்கல் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
