UPDATED : செப் 01, 2023 12:00 AM
ADDED : செப் 01, 2023 09:10 AM
அ நிறம் | அளவு
கோவை:
அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில், முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நாளையுடன் நிறைவு பெறுவதாக, கல்லுாரி முதல்வர் உலகி தெரிவித்தார்.கோவை அரசு கலை கல்லுாரியில், 20 முதுநிலை படிப்புகளில், 557 மாணவர்கள் நடப்பாண்டில் சேர்க்கப்படவுள்ளனர். இதற்காக, ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள், ஆக., 14ம் தேதி முதல் ஆன்லைன் வழியாக பெறப்பட்டன.கல்லுாரி முதல்வர் உலகி கூறுகையில், முதுநிலை சேர்க்கைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க இன்றுடன் அவகாசம் நிறைவு பெறுகிறது. மாணவர்கள் இறுதிவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
