தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னை ஐ.ஐ.டி: சர்வதேச ஆராய்ச்சி பூங்கா

சென்னை ஐ.ஐ.டி: சர்வதேச ஆராய்ச்சி பூங்கா

சென்னை ஐ.ஐ.டி: சர்வதேச ஆராய்ச்சி பூங்கா


UPDATED : செப் 01, 2023 12:00 AM

ADDED : செப் 01, 2023 10:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 01, 2023 12:00 AM ADDED : செப் 01, 2023 10:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதுமட்டுமின்றி உலகின் பெருமை வாய்ந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள சென்னை ஐ.ஐ.டி.,தனது ஆராய்ச்சி பூங்காவை புதுச்சேரியில் ஏற்படுத்த தற்போது அணுகியுள்ளது.இது தொடர்பாக புதுச்சேரி அரசுக்கு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது. இந்தியாவின் முதல் பல்கலைக்கழகத்தால் இயக்கப்படும் ஆராய்ச்சி பூங்கா சென்னை ஐ.ஐ. டி.,யில் தான் உள்ளது.இது ஸ்டான்போர்ட் பல் கலைக்கழகம், மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள வெற்றிகரமான ஆராய்ச்சி பூங்காக்களின் வரிசையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இருப்பினும், சர்வதேச அளவில் ஆராய்ச்சி பூங்காவை அமைக்க திட்டமிட்டுள்ள சென்னை ஐ.ஐ.டி.,அதற்கான விசாலமான 100 ஏக்கர் இடத்திற்கான அனுமதி கேட்டு புதுச்சேரி அரசினை அணுகியுள்ளது. கரசூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தினை புதுச்சேரி அரசு முடிவு செய்து 18 ஆண்டுகள் உருண்டோடி விட்டது.இதற்காக 748 ஏக்கர் நிலம் கையகப்படுத்தியும் 16 ஆண்டுகள் நகர்ந்துவிட்டது. தற்போது கரசூரில் தொழிற்சாலைகளை வரவேற்க திட்டமிட்டுள்ள புதுச்சேரி அரசு பல்வேறு மாநிலங்கள்,சர்வதேச அளவில் முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.எனவே, சென்னை ஐ.ஐ.டி., நிறுவனத்தின் ஆராய்ச்சி பூங்காவிற்கு விரைவில் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.பேச்சுவார்த்தை
புதுச்சேரியில் 12க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லுாரிகளும், 8க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் கல்லுாரிகளும் செயல்படுகின்றன. இவற்றை தவிர, தொழில்நுட்ப பல்கலைக்கழகம், என்.ஐ.டி., எனப்படும் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம், புதுச்சேரி பல்கலைக்கழகம் போன்றவையும் அமைந்துள்ளன. இந்த கல்வி நிறுவனங்களில் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பொறியியல் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ மற்றும் இளநிலை படிப்பில் ஆரம்பித்து, முதுநிலை, ஆராய்ச்சி வரை படித்துவிட்டு வெளியே வருகின்றனர்.இவர்களுக்கு உள்ளூரில் ஐ.டி.,பார்க் இல்லாததால் சென்னை, பெங்களூரு, ைஹதராபாத் போன்ற நகரங்களை நாடி செல்கின்றனர்.எனவே சென்னை ஐ.ஐ.டி.,மூலமாக ஐ.டி.,பார்க்கிற்கு தேவையான அடித்தளத்தை மாநிலத்தில் ஏற்படுத்தவும் புதுச்சேரி அரசு மற்றொரு பக்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. எனவே வெகுவிரைவில் சென்னை ஐ.ஐ.டி.,நிறுவனம் ஆராய்ச்சி வழியிலும், ஐ.டி.,பூங்காவிற்கான அடித்தளத்தை கொண்டு வருவதிலும் புதுச்சேரி மாநிலத்தில் தடம் பதிக்க உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us