UPDATED : செப் 02, 2023 12:00 AM
ADDED : செப் 02, 2023 09:59 AM
அ நிறம் | அளவு
மதுரை:
மதுரை வக்புவாரிய கல்லுாரி பி.எஸ்சி., மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், பி.எஸ்சி., விலங்கியல் 2ம் ஆண்டு மாணவர்களுக்கு தாவரவியல், வேதியியல் பாடங்களை நடத்த பேராசிரியர்கள் இல்லை. 50 நாட்களாக அப்பாடங்களை படிக்க முடியாத சூழல் உள்ளது. இன்னும் சில நாட்களில் அகமதிப்பீட்டுத் தேர்வு நடக்க உள்ளது.பேராசிரியர்கள் இல்லாததால் தேர்வு எழுத முடியாத நிலை உள்ளது. கல்லுாரி நிர்வாகத்தில் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. தேர்வு நெருங்குவதால் மனஉளைச்சலாக உள்ளது. உடனே பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், என தெரிவித்துள்ளனர்.
