UPDATED : செப் 09, 2023 12:00 AM
ADDED : செப் 09, 2023 10:44 AM
அ நிறம் | அளவு
சென்னை அரும்பாக்கம் மற்றும் செங்கல்பட்டில் உள்ள, அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லுாரிகளில், 160 இடங்களும், 17 தனியார் கல்லுாரிகளில் 1,500 இடங்களும் உள்ளன.இதற்கான கலந்தாய்வு, வரும், 11ம் தேதி காலை 7:00 மணிக்கு, அரும்பாக்கத்தில் உள்ள அண்ணா அரசு இந்திய முறை மருத்துவமனை வளாகத்தில் துவங்க உள்ளது. முதலில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கும். பின் தொடங்கும் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு, 13ம் தேதி வரை நடக்கும். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு, 14ம் தேதி நடக்கும். மேலும் விபரங்களை, www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
