தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘உலகின் மிகப்பெரிய பல்கலை’: இக்னோக்கு பாராட்டு!

‘உலகின் மிகப்பெரிய பல்கலை’: இக்னோக்கு பாராட்டு!

‘உலகின் மிகப்பெரிய பல்கலை’: இக்னோக்கு பாராட்டு!


UPDATED : ஜன 18, 2010 12:00 AM

ADDED : ஜன 18, 2010 01:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 18, 2010 12:00 AM ADDED : ஜன 18, 2010 01:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியா மற்றும் சர்வதேச அளவில் 33 நாடுகளில் மொத்தம் 30 லட்சம் மாணவர்களை இக்னோ கொண்டுள்ளது. தேவையான பயிற்சி, தரம், ஆக்கப்பூர்வமான செயல்பாடு, தேவை மிகுந்த படிப்புகள், சாதாரண கல்விக் கட்டணம் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள். திறந்தநிலை மற்றும் தொலைநிலை கல்விக்கான இந்தியாவின் தேசிய வள மையமாகவும், தொலைநிலை கல்வி வழங்குவதில் சர்வதேச அளவில் முன்னோடியாக திகழ்வதாகவும் யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.


யுனெஸ்கோ பொது இயக்குனர் இரினா பொகோவா கூறுகையில், “கிட்டத்தட்ட 30 லட்சம் மாணவர்களை கொண்டு தகவல் தொடர்பியல் தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தி வருவதாக” கூறியுள்ளார்.


2004ம் ஆண்டு கல்வி மேம்பாட்டிற்காக நிறுவப்பட்ட எஜுசாட் செயற்கைக்கோள், பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கூட்டமைப்பு ஆகியவற்றுடன் தொழில்நுட்பம் இணைந்த கல்வி வழங்குவதில் இக்னோ புதிய சகாப்தம் படைத்துள்ளது.


21 துறைவாரியான பிரத்யேக பள்ளிகள், 59 மண்டல மையங்கள், இரண்டாயிரத்து 300 பயிற்சி மையங்கள், 52 சர்வதேச மையங்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. சான்றிதழ், டிப்ளமோ, பட்டப்படிப்பு, ஆராய்ச்சி படிப்பு ஆகியவற்றில் ஆயிரத்து 500 படிப்புகளை இக்னோ வழங்குகிறது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us