தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேளாண் பட்டதாரிகளுக்கு தொழில் துவங்க அழைப்பு

வேளாண் பட்டதாரிகளுக்கு தொழில் துவங்க அழைப்பு

வேளாண் பட்டதாரிகளுக்கு தொழில் துவங்க அழைப்பு


UPDATED : அக் 13, 2023 12:00 AM

ADDED : அக் 13, 2023 05:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2023 12:00 AM ADDED : அக் 13, 2023 05:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:
வேளாண் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு, வேளாண் தொழில் முனைவோர் ஆக்குதல் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்படுகிறது.ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பொதுப் பிரிவு - 1, ஆதிதிராவிடர் இளைஞர்கள் -1, என, உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், வேளாண் உள்கட்டமைப்பு நிதித்திட்டத்தில் வங்கி கடனுதவியுடன் அக்ரி கிளினிக், பிற ளேவாண் சார்ந்த தொழில் துவங்க, 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு படித்த, 21 முதல், 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு அல்லது தனியார் துறையில் பணி செய்பவராக இருத்தல் கூடாது. உரிய ஆவணத்துடன், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு சான்று, பட்டதாரி சான்று, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல், வங்கியிடம் பெறப்பட்ட கடன் ஒப்புதல் ஆவணம், விரிவான திட்ட அறிக்கை ஆகியவற்றை, ஈரோடு, திண்டல், வித்யா நகரில் உள்ள மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் வரும், 25க்குள் வழங்க வேண்டும்.கூடுதல் தகவல்களை, வேளாண் அலுவலர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) ஜெயசந்திரன் - 98423 70603 மூலம் தொடர்பு கொண்டுஅறியலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us