தட்டச்சர், சுருக்கெழுத்தர் தேர்வு முடிவுகள் வெளியீடு
தட்டச்சர், சுருக்கெழுத்தர் தேர்வு முடிவுகள் வெளியீடு
UPDATED : அக் 28, 2023 12:00 AM
ADDED : அக் 28, 2023 08:02 AM
ஒவ்வொரு ஆண்டும் பிப்., ஆகஸ்டில் இளநிலை, முதுநிலைக்கான தமிழ், ஆங்கிலம் தட்டச்சர், சுருக்கெழுத்தர், சி.ஓ.ஏ., தேர்வு நடைபெறும்.டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பதவிக்கு முன்னுரிமை வழங்கப்படும். தமிழக அளவில் இத்தேர்வு கள் கடந்த ஆகஸ்டில் நடந்தது. இதற்கான முடிவுகள் நேற்று வெளியாகின.இதில் தட்டச்சு இளநிலை ஆங்கிலத்தில் 71.76 சதவீதம் பேரும், தமிழில் 78.72 சதவீதமும், தட்டச்சு முதுநிலை ஆங்கிலம் 58.77 சதவீதமும், தமிழில் 65.33 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.சுருக்கெழுத்து ஆங்கிலம் இளநிலை தேர்வில் 7.77 சதவீதமும், தமிழ் இளநிலை தேர்வில் 28.70 சதவீதமும், சுருக்கெழுத்து முதுநிலை ஆங்கிலம் 19.81 சதவீதமும், தமிழில் 53.41 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆண்டுதோறும் சுருக்கெழுத்து தேர்வுக்கான தேர்ச்சி சதவீதம் குறைந்து வருகிறது.சுருக்கெழுத்து ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:
அரசு அங்கீகாரமுடைய சுருக்கெழுத்து பள்ளியில் பயிற்சி பெற்ற ஆசிரியர் மூலம் பயிலாமல், தனித் தேர்வுகளாக தேர்வு எழுதுவதால் தேர்ச்சி சதவீதம் குறைந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
