தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொலிவு பெறுகிறது மாவட்ட மைய நுாலகம்

பொலிவு பெறுகிறது மாவட்ட மைய நுாலகம்

பொலிவு பெறுகிறது மாவட்ட மைய நுாலகம்


UPDATED : அக் 30, 2023 12:00 AM

ADDED : அக் 30, 2023 09:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2023 12:00 AM ADDED : அக் 30, 2023 09:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட மைய நுாலக கட்டடத்தை புனரமைக்க, அரசு நிதி ஒதுக்கியுள்ள நிலையில், விசாலமான நுாலக கட்டடம் கட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.குஜராத்தை சேர்ந்தவர் விட்டல்தாஸ்; திருப்பூரில், பருத்தி விற்பனைத் தொழிலில் ஈடுபட்டு, தன்னை நிலைப்படுத்திக்கொண்டார். அவர் தானமாக வழங்கிய இடத்தில் தான் தற்போது, மாவட்ட மைய நுாலகம் செயல்படுகிறது. கடந்த, 1958ல் துவங்கப்பட்ட நுாலகத்தில், தற்போது, 23 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்; தினமும் 120 பேர் வாசகர்களாக வந்து செல்கின்றனர்.கடந்தாண்டு சட்டசபை கூட்டத்தொடரில், மாநிலத்தில் உள்ள, 11 மாவட்ட மைய நுாலகங்கள் புனரமைக்கப்படும் என, அரசு அறிவித்தது. இதில், திருப்பூர் மாவட்ட மைய நுாலகமும் இடம் பெற்றுள்ளது. நுாலகத்துக்கு சுற்றுச்சுவர், தரையில் டைல்ஸ் பதிப்பது, சுவரில் வர்ணம் தீட்டி புதுப்பிப்பது, கீழ்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைத்து, அதிலிருந்து கழிப்பறைக்கு தண்ணீர் செலுத்துவதற்கான கட்டமைப்பு என, பல பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பணிகள் விரைவில் துவங்கும் என, நுாலகத்துறையினர் தெரிவிக்கின்றனர்.திருப்பூர் மாநகராட்சி சார்பில், நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் விசாலமான நுாலக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. நிப்ட் டீ கல்லுாரி மாணவர்கள், கட்டட சுவர் முழுக்க அழகிய வர்ணங்களை தீட்டி வைத்துள்ளனர். ஆனால், இந்நுாலக கட்டடம் பயன்பாடற்று, பூட்டியே கிடக்கிறது.சி பள்ளி வளாகத்துக்குள், பொதுமக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதால், அங்கு மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள நுாலக கட்டடம் பயன்பாட்டுக்கு வருமா என்பது சந்தேகம் தான் என வாசகர் வட்டம் மாவட்ட மைய நுாலகத் தலைவர் புருஷோத்தமன் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us