தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கலைவிழா மூலம் வெளிச்சத்துக்கு வந்த மாணவர்கள் திறமை

கலைவிழா மூலம் வெளிச்சத்துக்கு வந்த மாணவர்கள் திறமை

கலைவிழா மூலம் வெளிச்சத்துக்கு வந்த மாணவர்கள் திறமை


UPDATED : அக் 30, 2023 12:00 AM

ADDED : அக் 30, 2023 09:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2023 12:00 AM ADDED : அக் 30, 2023 09:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
மாணவ, மாணவியர் மத்தியில் புதைந்துள்ள திறமையை வெளிப்படுத்த, இக்கலை விழா சிறந்த வாய்ப்பாக அமைந்திருக்கிறது என தலைமை ஆசிரியர் பழனிசாமி கூறினார்.பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருப்பூர் நஞ்சப்பா, ஜெய்வாபாய், கே.எஸ்.சி., பள்ளிகளில் நடந்த மாவட்ட கலை விழாவில் மாணவ, மாணவியர், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆறு முதல், பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கான, மாவட்ட அளவிலான கலைவிழாவை நடத்தி முடித்திருக்கிறது மாவட்ட பள்ளிக்கல்வித்துறை.கட்டுரை, பேச்சு, ஓவியம், நடனம், இசைக்கருவிகள் இசைப்பது உள்ளிட்ட பிரிவுகளில், 6 முதல், 8ம் வகுப்பு வரை, 33 வகை போட்டிகள்; 9, 10 வகுப்பு மாணவர்களுக்கு, 75 வகை போட்டி, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, 82 வகை போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியரும், தங்கள் முழுத்திறமையை வெளிக்காட்டினர்.பழனிசாமி, தலைமையாசிரியர், நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி:
மாநில அளவில் வெற்றி பெறவுள்ள மாணவ, மாணவியருக்கு கலையரசன், கலையரசி விருது வழங்கப்பட இருக்கிறது. மாணவ, மாணவியர் மத்தியில் புதைந்துள்ள திறமையை வெளிப்படுத்த, இக்கலை விழா சிறந்த வாய்ப்பாக அமைந்திருக்கிறது. தங்கள் முழுத்திறமையையும் மாணவர்கள் வெளிப்படுத்துகின்றனர்.ஜெயமாயகிருஷ்ணன், துணைத்தலைவர், பள்ளி மேலாண்மைக்குழு:
கலை விழாக்கள் வாயிலாக மாணவ, மாணவியர் மத்தியில் புதைந்துள்ள பல்வேறு திறமைகளை அடையாளம் காண முடிகிறது; அதே நேரம், அவர்களின் திறமையை ஊக்குவிக்க, பள்ளிகளில் பிரத்யேக ஆசிரியர்களை நியமித்து, தொடர்ந்து பயிற்சி வழங்கினால் தான், அவர்களின் திறமை வளரும்; வாய்ப்புகள் கிடைக்கும்.ஷாகிதா, உறுப்பினர், பள்ளி மேலாண்மைக்குழு:
தமிழ் வழிக்கல்வியில் படிக்கும் பிள்ளைகளுக்கு திறமைக்குறைவு என்ற மேலோட்டமான பார்வையை, இந்தக் கலைவிழா தவிடு பொடியாக்கியுள்ளது. அரசுப்பள்ளி மாணவ, மாணவியருக்குள் உள்ள திறமையை, கலைவிழா வெளிக்காட்டியிருக்கிறது. கல்வியுடன், இதுபோன்ற கலைகளையும் கற்றுத்தர வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us