தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்படாத லிப்ட்டுகள்

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்படாத லிப்ட்டுகள்

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்படாத லிப்ட்டுகள்


UPDATED : நவ 03, 2023 12:00 AM

ADDED : நவ 03, 2023 10:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2023 12:00 AM ADDED : நவ 03, 2023 10:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ரூ.154.84 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்களை இரு மாதங்களுக்கு முன்பு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இதில் ஐந்து தளங்களை கொண்ட கட்டடத்தில் கிழக்குப்பகுதியில் நோயாளிகள் வசதிக்காக இரு லிப்ட்டுகளும், மேற்குப் பகுதியில் இரு லிப்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.ஐந்து மாடிகளிலும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகளுக்கு உதவியாளர்களாக அவரது உறவினர்கள் தங்கியுள்ளனர். நோயாளிகள் ஒவ்வொரு முறையும் ஐந்து மாடி கட்டடத்தில் இருந்து இறங்குவதற்கு ஒரு லிப்டு அல்லது இரு லிப்ட்டுகள் மட்டுமே முழுமையாக இயக்கப்படுகிறது.நோயாளிகள் ஒவ்வொரு சோதனைக்கும் தரைதளத்திற்கு செல்லும்நிலை உள்ளது. பரிசோதனை அறை கீழ் தளத்தில் அமைந்துள்ளதால் ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் மாடிப்படிகளில் ஏறி இறங்க முடியாமல் தவிக்கின்றனர்.அரசு மருத்துவக்கல்லுாரி நிர்வாகம் அனைத்து லிப்ட்டுகளையும் நோயாளிகளின் வசதிக்காக முழுமையாக இயக்க வேண்டும். கட்டடம் கட்டி திறக்கப்பட்ட இரு மாதங்களில் லிப்டுகள் செயல்படாமல் இருப்பது வேதனையளிக்கிறது.லிப்டுகளில் பழுதுகள்இருந்தால் அதனை சரி செய்து முழுமையாக இயக்குவதற்கு நிர்வாகம்நடவடிக்கை எடுக்க வேண்டும். கலெக்டர் விஷ்ணு சந்திரன் இதற்கு உத்தரவிட வேண்டும். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us