UPDATED : நவ 03, 2023 12:00 AM
ADDED : நவ 03, 2023 10:22 AM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் சேர்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, ஒன்பது, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கான வழிகாட்டுதல் கூட்டம், கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது.இதில், கல்வித்துறை அதிகாரிகள், பெற்றோர் பலர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:
தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் ஒன்று அரசு மாதிரி பள்ளி. இத்திட்டத்தில் சேர்ந்து தங்கள் குழந்தைகளை இப்பள்ளியில் சேர்க்க முன்வர வேண்டும்.
