தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை

அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை

அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை


UPDATED : நவ 05, 2023 12:00 AM

ADDED : நவ 05, 2023 10:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2023 12:00 AM ADDED : நவ 05, 2023 10:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மாணவர்கள் செல்லும் மருத்துவக்கல்லுாரி சாலை இரவு நேரங்களில் இருளில் மூழ்குவதால் விஷமிகளாலும், விஷ ஜந்துக்களாலும் பாதுகாப்பற்ற நிலையில் தவிக்கின்றனர்.ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக்கல்லுாரி கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்குள் உள்ளது. மருத்துவக்கல்லுாரியில் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மாணவர்கள், எய்ம்ஸ் மருத்துவக்கல்லுாரி மாணவர்கள் என 500 பேர் படிக்கின்றனர்.அனைவரும் இங்குள்ள விடுதியில் தங்கியுள்ளனர். இவர்கள் கல்லுாரிக்கு வரும் சாலை இரவில் இருளில் மூழ்கியுள்ளது. தெரு விளக்குகள் எதுவும் எரிவதில்லை. கல்லுாரியை ஒட்டியுள்ள பகுதிகள் புதர் நிறைந்த காடாக உள்ளது.இவர்கள் செல்லும் சாலை இருளில் இருப்பதால் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அடிக்கடி மாணவர்களை நடுங்க வைக்கின்றன. விடுதியில் இருந்து அருகில் உள்ள அம்மா பூங்கா சென்று வரவும், பஜாரில் பொருட்கள் வாங்கி வரவும் இருள் சூழந்த இந்த சாலையில் தான் நடந்து வர வேண்டும்.நேற்று மருத்துவக்கல்லுாரி சாலையில் இரண்டு பெரிய பாம்புகள் சென்றதால் மாணவர்கள் அச்சமடைந்தனர். சில நாட்களுக்கு முன் கொடிய விஷத்தன்மை கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு சென்றுள்ளது. மருத்துவக்கல்லுாரி பகுதியில் பாம்புகள் படையெடுக்கும் நிலையில் இருளில் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது.மேலும் விஷமிகளால் மாணவர்களுக்கு ஆபத்து உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மருத்துவக்கல்லுாரிக்கு செல்லும் சாலை முழுவதும் விளக்குகள் அமைத்து உயிர் காக்கும் மருத்துவ மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.சிலர் அப்பகுதியில் பாம்புகள் நடமாட்டத்தை வீடியோ எடுத்து தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். அப்பகுதியில் மாணவர்கள் அச்சமின்றி சென்று வர தெரு விளக்குகள் அமைக்க பட்டணம்காத்தான் ஊராட்சி நிர்வாகத்திற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும். இப்பகுதியில் நடை பயிற்சி செய்வோரும் அச்சமடைந்துள்ளனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us