தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசுப்பள்ளிகளில் நாளை ஆன்லைன் வினாடி-வினா

அரசுப்பள்ளிகளில் நாளை ஆன்லைன் வினாடி-வினா

அரசுப்பள்ளிகளில் நாளை ஆன்லைன் வினாடி-வினா


UPDATED : நவ 05, 2023 12:00 AM

ADDED : நவ 05, 2023 10:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2023 12:00 AM ADDED : நவ 05, 2023 10:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, ஆன்லைன் மூலம், வினாடி-வினா தேர்வு, நாளை (நவ.,6) தேதியில் இருந்து நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.அரசுப்பள்ளிகளில் படிக்கும் ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களின் கற்றல் திறன் அறிய, மாநில மதிப்பீட்டு புலம் சார்பில், வினாடி-வினா தேர்வு நடத்தப்படுகிறது. இதில், மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெறுவோருக்கு, மாநில அளவிலான வினாடி-வினா தேர்வு நடத்தி, தகுதியானவர்கள் தேர்ந்தெடுத்து, வெளிநாடு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்.இதற்கு, பள்ளி அளவிலான ஆன்லைன் வினாடி-வினா தேர்வு, நாளை (நவ.,6), ஹைடெக் ஆய்வகத்தில் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, வரும் 16ம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். தேர்வு நடத்த, ஆய்வகத்தை தயார்ப்படுத்துமாறு, தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், பள்ளி அளவிலான வினாடி-வினா தேர்வில், ஒவ்வொரு மாணவருக்கும்,வெவ்வேறு வகை வினாக்கள் இடம்பெறும். ஆன்லைனில் கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள், விடைகளை தேர்வு செய்ய வேண்டும். மாணவர்களின் எமிஸ் எண்ணை இணைத்து தேர்வு நடத்துவதால், சரியான விடைக்கான மதிப்பெண்களை, எளிதில் அறியலாம். இனி மாதந்தோறும் இத்தேர்வு நடத்தப்படும். ஆன்லைன் தேர்வு குறித்த சந்தேகங்கள் அறிய தொடர்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளதோடு, ஆய்வகத்தை தயார்ப்படுத்த வழிகாட்டி நெறிமுறை அளிக்கப்பட்டுள்ளது, என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us