தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தன்னம்பிக்கை, தொடர் முயற்சி வெற்றிக்கு வழி

தன்னம்பிக்கை, தொடர் முயற்சி வெற்றிக்கு வழி

தன்னம்பிக்கை, தொடர் முயற்சி வெற்றிக்கு வழி


UPDATED : ஜன 28, 2010 12:00 AM

ADDED : ஜன 28, 2010 12:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 28, 2010 12:00 AM ADDED : ஜன 28, 2010 12:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: “இலக்கை அடைவதில், தன்னம்பிக்கையும், தொடர் முயற்சியும் வெற்றிக்கு வழி வகுக்கும்,” என சிறப்பு அதிரடிப்படை ஐ.ஜி., சைலேந்திரபாபு பேசினார்.


திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம்., மெட்ரிக் பள்ளியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் பயிற்சி தள துவக்க விழா நடந்தது. முதல்வர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். தாளாளர் கனகசபை முன்னிலை வகித்தார். சிறப்பு அதிரடிப்படை ஐ.ஜி., சைலேந்திரபாபு துவக்கி வைத்தார்.


மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசியதாவது:
தொடர்ச்சியாக 30 நாட்கள் கடினமாக உழைத்தால், 100 சதவீத மதிப்பெண் பெறுவது சுலபமாகும். குறிப்பிட்ட இலக்கை அடைவதில் ஆர்வமும், ஈடுபாடும் தேவை. பாடங்களை மனப்பாடம் செய்வது, தேர்வில் போதிய பலன் தருவதில்லை. மறதியை ஏற்படுத்தி, மதிப்பெண் பெறும் வழிகளை முழுமையாக முடக்கி விடும்.


நேசித்து படிப்பது மட்டுமின்றி, புரியாத அம்சங்களை தெரிந்த தகவல்களுடன் இணைத்து புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். படிப்பது மட்டுமின்றி அவற்றை மீண்டும் மீண்டும் சிந்தித்து நினைவுபடுத்தல், சுயதேர்வு போன்ற முறைகளே எளிதான வெற்றிக்கு வழி வகுக்கும். தினமும் எதிர்கால திட்டமிடலுக்காக, ஐந்து நிமிடங்களை ஒதுக்க வேண்டும். எதிர்கால இலக்கு, அதற்காக அன்றைய நாளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், இலக்கை அடைவதில் உள்ள பிரச்னை, இது தொடர்பாக நம்மிடம் உள்ள பலம், பலவீன அம்சங்கள் குறித்து சிந்திக்க வேண்டும்.


மேலும், பலவீனங்களை ஒதுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை, அவற்றை கையாளும் முறை குறித்த சிந்தனை போன்றவை வெற்றியைப் பெறுவதில் முக்கிய இடம் வகிக்கின்றன. இவற்றில் அதிக முக்கியத்துவம் பெறுவது தன்னம்பிக்கை. எந்த செயலும் முயன்றால் முடியாதது இல்லை. இலக்கை அடைவதற்கான செயல்களில், தொடர் முயற்சி மட்டுமே வெற்றியை எளிதாக்குவதாக இருக்கும். இவ்வாறு சைலேந்திரபாபு பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us