தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லுாரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி அறிவிப்பு

கல்லுாரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி அறிவிப்பு

கல்லுாரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி அறிவிப்பு


UPDATED : நவ 06, 2023 12:00 AM

ADDED : நவ 07, 2023 10:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2023 12:00 AM ADDED : நவ 07, 2023 10:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உலக சமூகங்களை விட, பண்டைய தமிழ் சமூகம், கலை, அரசியல், மருத்துவம், தொழில் நுட்பங்களில் மேம்பட்ட வாழ்க்கையை வாழ்ந்துள்ளது. அதை வெளிப்படுத்தும் வகையில், இளங்கலை பயிலும் கல்லுாரி மாணவர்கள், பழந்தமிழர் நீர் மேலாண்மை, கட்டடக்கலை, சிற்பம், ஓவியம், நாடகம் மற்றும் தற்காப்பு கலைகள் குறித்த கட்டுரைகளை எழுதலாம்.பழந்தமிழ் இலக்கியங்களை அடிப்படையாக வைத்து, சமீபத்திய அகழாய்வு சான்றுகள், தமிழினத்தின் மேன்மையும் தொன்மையும், பண்டைய நகர நாகரிகம், குடும்ப உறவு, வேளாண்மை, வாழ்வியல் அறம், விருந்தோம்பல், வழிபாடு, விழாக்கள் உள்ளிட்ட தலைப்புகளில், முதுநிலை மாணவர்கள் கட்டுரைகள் எழுதலாம்.தேர்வாகும் கட்டுரைகளுக்கு முதல் பரிசாக 10,000; இரண்டாம் பரிசாக 7,000; மூன்றாம் பரிசாக 5,000 ரூபாய் வழங்கப்படும். ஆறுதல் பரிசாக மூன்று பேருக்கு 3,000 ரூபாய் வழங்கப்படும். கட்டுரைகளை, 30ம் தேதிக்குள், இயக்குனர், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், செம்மொழி சாலை, பெரும்பாக்கம், சென்னை - 600 100 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us