UPDATED : நவ 09, 2023 12:00 AM
ADDED : நவ 09, 2023 05:36 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி:
புதுச்சேரி பல்கலையில் நுால் வெளியீட்டு விழா நடந்தது.புதுச்சேரி பல்கலை துணைவேந்தர் குர்மீத்சிங் எழுதிய இடைநிலை கலை பயிற்சி சிக்கல்கள் மற்றும் சாத்திய கூறுகள் என்ற நுாலை வெளியிட்டார். இந்நூல் 2022ம் ஆண்டு உலக நாடக தினக் கொண்டாட்டத்தில் நடத்தப் பெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்பாகும். இந்நுாலை முனைவர் ராசா ரவிவர்மா மேற்குறித்த கட்டுரைகளை தொகுத்து, பகுத்து நூலாகப் பதிப்பித்துள்ளார்.பேராசிரியர் ஸ்ரீதரன், முனைவர் சரவணன் வேலு, பயிற்றுநர் முருகவேல், உதவிப் பேராசிரியர்கள் பவித்ரா, பிரியங்கா சர்மா, அலுவலகப் பணியாளர்கள் கலியப்பெருமாள், வேலவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
