தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு இலவச பயிற்சி

அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு இலவச பயிற்சி

அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு இலவச பயிற்சி


UPDATED : நவ 09, 2023 12:00 AM

ADDED : நவ 09, 2023 05:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 09, 2023 12:00 AM ADDED : நவ 09, 2023 05:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்:
காரைக்கால் கலெக்டரின் முயற்சியால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டது.பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் இப் பயிற்சி வகுப்பை கலெக்டர் குலோத்துங்கன் துவக்கி வைத்தார். சீக்கர்ஸ் கல்வி நிறுவன இயக்குனர் முரளிதரன், கல்வித்துறை துணை இயக்குனர் ராஜேஸ்வரி, தாசில்தார் செல்லமுத்து முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் கலெக்டர் குலோத்துங்கன் பேசிதாவது:
விவசாய குடும்பத்தில் பிறந்த நான் படித்தது அரசு பள்ளியில்தான். கடினமான சூழ்நிலையில்தான் பள்ளிப் படிப்பை முடித்தேன். நான் முதலில் மருத்துவராக வேண்டும் என நினைத்தேன். குடும்ப சூழ்நிலை காரணமாக படிக்க இயலவில்லை. இளங்கலை வேளாண்மை படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தேன்.பின்னர் கலெக்டராக விரும்பி, அதற்கான தேர்வில் முதல் இரண்டு தடவையும் தோல்வியை சந்தித்தேன். விடாமுயற்சியினால் தற்போது உங்கள் முன் கலெக்டராக உள்ளேன். எனவே தொடர்ந்து முயற்சி எடுத்து, வெற்றி பெற அயராது பாடுபட வேண்டும். படித்தால் மட்டுமே நமக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.இப்பயிற்சி வகுப்பு மே மாதம் வரை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும். பொதுத்தேர்வு மார்ச் மாதம் முடிந்த பிறகு தினமும் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. அரசு பள்ளியில் பயிலும் 271 மாணவர்கள் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற விருப்பம் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us