டாக்டர்களுக்கான ஆராய்ச்சி படிப்பு: ஐ.ஐ.டி., அறிமுகம்
டாக்டர்களுக்கான ஆராய்ச்சி படிப்பு: ஐ.ஐ.டி., அறிமுகம்
UPDATED : நவ 18, 2023 12:00 AM
ADDED : நவ 18, 2023 03:50 PM
அ நிறம் | அளவு
சென்னை:
மருத்துவ துறையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில், டாக்டர்களுக்கான ஆராய்ச்சி படிப்பை, சென்னை ஐ.ஐ.டி., அறிமுகம் செய்துள்ளது.மத்திய உயர் கல்வி நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி.,யும், ராமச்சந்திரா மருத்துவ பல்கலையும் இணைந்து, எம்.டி., பிஎச்.டி., என்ற இரட்டை படிப்பை அறிமுகம் செய்துள்ளன. இதில், எம்.டி., படிப்பை ராமச்சந்திரா பல்கலையும், பிஎச்.டி., படிப்பை, ஐ.ஐ.டி.,யும் நடத்த உள்ளன.இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், சென்னை ஐ.ஐ.டி.,யில் கையெழுத்தானது. ஐ.ஐ.டி., இயக்குனர் காமக்கோடி, ராமச்சந்திரா பல்கலை துணை வேந்தர் டாக்டர் உமாசேகர் கையெழுத்திட்டனர். ராமச்சந்திரா பல்கலை ஆராய்ச்சி நிறுவன, &'டீன்&' பாலாஜி சிங், சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் கிருஷ்ணகுமார், பாபி ஜார்ஜ் பங்கேற்றனர்.
