தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தலைமையாசிரியர்களுக்கு உல்லாஸ் கல்வியறிவு திட்ட பயிற்சி

தலைமையாசிரியர்களுக்கு உல்லாஸ் கல்வியறிவு திட்ட பயிற்சி

தலைமையாசிரியர்களுக்கு உல்லாஸ் கல்வியறிவு திட்ட பயிற்சி


UPDATED : நவ 19, 2023 12:00 AM

ADDED : நவ 19, 2023 04:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2023 12:00 AM ADDED : நவ 19, 2023 04:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
மாநில எழுத்தறிவு மையம் சார்பில் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான &'உல்லாஸ்&' கல்வியறிவுத் திட்டம் தொடர்பான நோக்குநிலை பயிற்சி நேற்று துவங்கியது.லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடந்த துவக்க நிகழ்ச்சியில், விரிவுரையாளர் ராஜ்குமார் வரவேற்றார். மாநில எழுத்தறிவு மைய நோடல் அலுவலர் சுகுணா சுகிர்த பாய் நோக்கவுரை ஆற்றினார்.பள்ளிக் கல்வி இயக்குநர் பிரியதர்சினி திட்டத்தின் அவசியம், இத்திட்டத்தினை செயல் படுத்துவதில் தலைமை ஆசிரியர்களின் பங்கு குறித்து கூறினார். முதன்மை கல்வி அலுவலர் தனசெல்வன் நேரு வாழ்த்தி பேசினார்.பள்ளித்துணை ஆய்வாளர்கள் சொக்கலிங்கம், லிங்குசாமி, அமல்ராஜ் லீமாஸ், குணசுந்தரி உள்ளிட்ட 150 அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். விரிவுரையாளர் பூர்ணா நன்றி கூறினார். பாரதிராஜா தொகுத்து வழங்கினார்.பயிற்சி பெற்ற தலைமை ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகள் உல்லாஸ் திட்டத்தின் கற்றல் மையங்களாக இருக்கும். இத்தலைமையாசிரியர்கள் தன்னார்வல ஆசிரியர்களைக் கொண்டு கல்லாதோர் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களுக்குக் கல்வியறிவு அளிக்கப்படும்.கற்க விரும்பும் 15 வயதிற்கு மேற்பட்ட கல்லாதவர்கள் அருகில் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களை அணுகி தங்களை இத்திட்டத்தில் கற்போராக இணைத்துக் கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us