தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆங்கில அலர்ஜி மறைய வேண்டும்! தன்னார்வலர்களின் அடடே முயற்சி

ஆங்கில அலர்ஜி மறைய வேண்டும்! தன்னார்வலர்களின் அடடே முயற்சி

ஆங்கில அலர்ஜி மறைய வேண்டும்! தன்னார்வலர்களின் அடடே முயற்சி


UPDATED : நவ 20, 2023 12:00 AM

ADDED : நவ 20, 2023 10:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2023 12:00 AM ADDED : நவ 20, 2023 10:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எனக்கு கணக்குன்னாலே, அலர்ஜி; சுத்தமா எனக்கு, கணக்கு வராது... இப்படி புலம்பும் மாணவர்களுக்கு, வாய்ப்பாட்டை நல்லா மனப்பாடம் செஞ்சுக்க; கணக்கு தானா வரும் என்பதுதான், ஆசிரியர்கள் தந்த வெற்றி மந்திரம்.ஒன்றாம் வாய்ப்பாட்டில் இருந்து, 12ம் வாய்ப்பாடு வரை புரிந்து படித்து, மனதில் நிறுத்திக் கொண்டாலே போதும்; கணக்கு இனிக்கும் என்பது, ஆசிரியர்கள் வழங்கிய டிப்ஸ், பலருக்குமான பள்ளி அனுபவமும் கூட. மனக்கணக்கு, விரல் கணக்கு... இவை இரண்டும் சேர்ந்து, வாய்ப்பாடு வடிவில், மாணவர் மனதில் பதிந்தது.அதே போன்று, அரசுப்பள்ளியில் தமிழ் வழி கற்கும் மாணவ, மாணவியருக்கு இங்கிலீஷ், சுட்டுப்போட்டாலும் வராது&' என்ற, மாய மனநிலையில், கைடுகளின் உதவியுடன் ஆங்கிலம் கற்பித்துக் கொடுக்கப்பட்ட, கல்விச் சூழலும் பல இடங்களில் இருந்தது.வெறும், 26 எழுத்துதான் ஆங்கிலம்; அடிப்படை இலக்கணம் புரிந்துகொண்டால் ஆங்கிலமும் எளிது என்ற தன் நம்பிக்கை விதைத்து, ஆங்கில அறிவு புகட்டிய ஆசிரியர்களும் இருக்கத் தான் செய்கின்றனர். கால்குலேட்டர், கம்ப்யூட்டர், மொபைல் போன் வாயிலாகவே கணக்கு போட்டுக் கொள்ளும் பழக்கம், வழக்கத்துக்கு வந்தாலும், மனக்கணக்கு தான், அறிவு சார்ந்தது என்ற நோக்கில், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பாடு மற்றும் ஆங்கில அகராதி புத்தகத்தை அச்சிட்டு, இலவசமாக வழங்கி வருகின்றனர், அவிநாசியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் சிலர்.கடந்த, 25 ஆண்டுகளாக இச்சேவையை செய்து வருகிறோம்; இதுவரை, 10 லட்சம் வாய்ப்பாடு, அகராதி அச்சடித்து, மாணவ, மாணவியருக்கு வழங்கியுள்ளோம். 1 முதல், 5 வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவியருக்கு வாய்ப்பாடும்; 6 முதல், 8 வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவியருக்கு ஆங்கில இலக்கண புத்தகமும் வழங்கி அடிப்படை கணக்கு, ஆங்கில புரிதலுக்கு துணை புரிகிறோம். திருப்பூர் மட்டுமின்றி, மதுரை, சிவகாசி, திருச்சி, நீலகிரி என, பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கிறோம் என்றனர் இப்பணியை ஒருங்கிணைக்கும் வடிவேலு, தெய்வசிகாமணி ஆகியோர். இவர்களின் இந்த கல்விப்பயணத்தில், சந்திரசேகர், மாதவன், முத்துக்குமார், ஆறுமுகம், ஸ்ரீகண்டன் உள்ளிட்ட பலரும் இணைந்து பயணிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us