UPDATED : நவ 23, 2023 12:00 AM
ADDED : நவ 23, 2023 09:58 AM
வடலுார்:
ஆர்.கே.சிட்டி நகரில் வசித்து வரும் அருள்பிரகாஷ்- செல்லின் பெரியநாயகி தம்பதியர் மகன் பிரிதிவிராஜ் 15; வடலூர் புதுநகர் அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். 2014ம் ஆண்டு முதல் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட இவர், பெற்றோர் உதவியுடன் பள்ளிக்கு சென்று வருகிறார். சிறு வயது முதலே ஓவியத்தில் ஆர்வமுள்ள பிரதிவிராஜ் காமராஜர், காந்தி, நேரு, சுபாஷ் சந்திரபோஸ் , பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், கருணாநிதி, கிரிக்கெட் வீரர்களின் படங்கள் அழகாக வரைகிறார். ஓவியப் போட்டிகளில் பங்கேற்று, பரிசுகள் பல பெற்று அசத்தியுள்ளார்.நடக்க முடியாமல் அவதியுறும் மாற்றுத்திறனாளி மாணவருக்கு உள்ள திறமையை பலரும் பாராட்டி வருகின்றனர். பள்ளிக்கு சென்று கல்வி கற்கவும், ஓவிய பயிற்சி அளிக்கவும் அரசின் உதவி தேவை என, அவரது பெற்றோர் அரசிடம் எதிர்பார்க்கின்றனர்.
