தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எமிஸ் பதிவேற்ற குளறுபடி ஆசிரியர்கள் தவிப்பு

எமிஸ் பதிவேற்ற குளறுபடி ஆசிரியர்கள் தவிப்பு

எமிஸ் பதிவேற்ற குளறுபடி ஆசிரியர்கள் தவிப்பு


UPDATED : நவ 25, 2023 12:00 AM

ADDED : நவ 25, 2023 10:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2023 12:00 AM ADDED : நவ 25, 2023 10:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்:
பள்ளிக்கல்வித்துறை சார்பில் துவக்கப்பள்ளிகளின் அனைத்து நடவடிக்கைகளும் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இதில் பதிவேற்றம் செய்த பிறகும் குளறுபடியால் அதே தகவல்களை மீண்டும் கேட்பதால் ஆசிரியர்கள் தவிக்கின்றனர். எமிஸ் என்ற இணையதளத்தில் பள்ளிகளில் மாணவர்களுக்கு 16 வகை விலையில்லா பொருட்கள் வழங்கியது.ஆசிரியர்கள், மாணவர்கள் வருகைப்பதிவு, வளரறி மதிப்பீடு என அன்றாட நடவடிக்கைகள் அனைத்தும் ஆசிரியர்கள் தரப்பில் பதிவேற்றம் செய்யப்படும் நிலையில், அவை பதிவேற்றம் ஆகவில்லை என அதிகாரிகள் மீண்டும் மீண்டும் அதை செய்ய அறிவுறுத்துகின்றனர்.இதில் ஆசிரியர்கள் சங்கத்தினர் போராட்டம் நடத்திய நிலையில் பள்ளிக்கல்வி அமைச்சரும், இயக்குநரும் சேர்ந்து எமிஸ் பணிகளில் இருந்து ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனஉறுதியளித்தது குறிப்பிடத்தக்கது. எனினும் பிரச்னை தொடர்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us