sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

வனத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் நூலகம் வேண்டும்

/

வனத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் நூலகம் வேண்டும்

வனத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் நூலகம் வேண்டும்

வனத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் நூலகம் வேண்டும்


UPDATED : ஜன 17, 2024 12:00 AM

ADDED : ஜன 17, 2024 10:34 AM

Google News

UPDATED : ஜன 17, 2024 12:00 AM ADDED : ஜன 17, 2024 10:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்:
கம்பம் வனச்சரக அலுவலகத்தில் வனம் மற்றும் வன உயிரினங்களின் முக்கியத்வத்தை விளக்கும் புத்தகங்கள் அடங்கிய நூலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை செயல்படுத்த வேண்டும்.மேகமலை வனஉயிரின சரணாலயம், புலிகள் காப்பகமாக மாறிய பின்பு, வனஉயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வனத்துறையினரின் கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. வன உயிரினங்களின் பாதுகாப்பு, வனப்பரப்பில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுவது போன்ற பணிகள் தீவிரம் காட்டப்படுகிறது. சுற்றுப்புறச்சூழல் மேம்பாட்டிற்கு காடுகளின் பங்கு மற்றும் வன உயிரினங்களின் பங்கு அதிகம் என்பதை விளக்க வனத்துறை திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கம்பம் கிழக்கு வனச்சரகத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டடம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, அதில் காடுகளின் முக்கியத்வம், காடுகளில் வசிக்கும் வன உயிரினங்களின் முக்கியத்வம் பற்றி விரிவாக விளக்கும் புத்தகங்கள் கொண்ட நூலகம் அமைக்கப்படும் என்று கடந்தாண்டு வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.மேலும் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பில் காடுகள் எவ்வாறு உதவுகிறது என்பதை விளக்கும் புத்தகங்களும் அந்த நூலகத்தில் இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நூலகத்தில் பொதுமக்கள், மாணவர்கள் படிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இதன்மூலம் இப்பகுதி மக்களிடம் காடுகள், வன உயிரினங்களின் முக்கியத்வத்தை பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும் என்று வனத்துறை கூறியது. ஆனால் இது வரை நூலகம் அமைக்கப்படவில்லை. வனத்துறை அலுவலகத்தில் நூலகம் அமைக்க மேகமலை புலிகள் காப்பக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us