UPDATED : ஜன 24, 2024 12:00 AM
ADDED : ஜன 24, 2024 09:46 AM
சென்னை:
நுங்கம்பாக்கம், மகளிர் கிறித்துவ கல்லுாரியின் தேசிய மாணவர் படை மாணவியர், கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், எழும்பூரில் உள்ள பிரசிடென்சி பெண்கள் பள்ளி சுவரில் ஓவியம் வரைந்துள்ளனர். சுற்றுச்சுவரில் வரைந்துள்ள ஓவியத்தில், ஒவ்வொரு மனிதனின் வாழ்வில், கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கியும், நாட்டில் கல்வக்கென துவக்கப்பட்ட அரசின் திட்டங்கள் குறித்து விளக்கி இருந்தன.தவிர, காலை மற்றும் மதிய உணவு திட்டங்கள், அனைவருக்கும் கல்வி, பெண் குழந்தைகள் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உள்ளிட்டவை அரசின் திட்டங்கள் குறித்தும் விளக்கி வண்ணம் தீட்டியுள்ளனர்.மாணவியர் கடந்து ஆண்டு, சென்ட்ரல் மேம்பாலத்தில், போக்குவரத்து குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ஓவியம் வரைந்தனர். எழும்பூர் பள்ளியில் வரையப்பட்ட மாணவியரின் ஓவியம் பலதப்பினரை கவர்ந்து வருகிறது. அனைத்து சுவர்களிலும் உள்ள அரசியல் சுவர் விளம்பரங்களை அழித்து, இதுபோன்ற அரசின் திட்டங்களை ஓவியமாக வரைந்தால், விழிப்புணர்வு ஏற்படுத்தல் மட்டுமின்றி மக்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும் என, மாணவியர் தெரிவித்தனர்.