UPDATED : பிப் 07, 2024 12:00 AM
ADDED : பிப் 07, 2024 09:36 AM
கீழடி:
கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு அகழாய்வில் எடுக்கப்பட்ட 13,608 பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. இதில் விவசாயம், வணிகம், பானைகள், அணிகலன்கள், விளையாட்டு பொருட்கள் என மாணவ - மாணவியர் உள்ளிட்ட பலரும் அறியும் வண்ணம், தனித்தனியாக கண்ணாடி கூண்டுக்குள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.பார்வையாளர்கள் கண்ணாடியை தொடாமல் பார்வையிட ஊழியர்கள் வலியுறுத்தினாலும் யாரும் கண்டு கொள்வதில்லை. கண்ணாடி கூண்டுகளை தட்டி விடுவது, பொருட்களை தடவி பார்ப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதால் பொருட்களும், கண்ணாடி கூண்டும் சேதமடைந்து வருகின்றன.இதனால் பார்வையாளர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். பொருட்களை சேதப்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று, எச்சரிக்கை பலகையை வைக்க வேண்டும் என ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.