UPDATED : பிப் 27, 2024 12:00 AM
ADDED : பிப் 27, 2024 09:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:
ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ள பல்வேறு பழங்கால நாணயங்களை, மாணவர்கள், பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில், தற்போது இந்தியா, ரஷ்யா, மொரீஷியஸ், குவைத் உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்ட நாடுகளின் நாணயங்கள், தபால் தலைகள் இடம் பெற்றுள்ளன.குறிப்பாக, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்துடன், அழிந்து வரும் விலங்குகள், பறவைகள் பொறிக்கப்பட்ட நாணயங்கள், அஞ்சல் தலைகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அதிகளவில் குவிந்து, ஆர்வத்துடனும், ஆச்சரியத்துடனும் கண்டு ரசித்து வருகின்றனர்.