UPDATED : பிப் 27, 2024 12:00 AM
ADDED : பிப் 27, 2024 08:19 AM
பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு, பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., செயலர் மணீஷ் ஜெயின் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
மாணவர்களின் குறைதீர் நடவடிக்கை தொடர்பான, யு.ஜி.சி., விதிகளை, அனைத்து பல்கலைகள் மற்றும் கல்லுாரிகள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். மாணவர்களின் குறைகளை தீர்க்க, குறை தீர்ப்பாளர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.குறை தீர்ப்பாளர்கள் மற்றும் பல்கலையின் துணைவேந்தர் இடையே, மாணவர்களின் குறைகளை தீர்ப்பது குறித்து, ஆலோசனைகள் நடக்க வேண்டும்.குறைந்தபட்சம், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாணவர்களின் குறைகளை கேட்க வேண்டும். குறைதீர் கமிட்டியின் செயல்பாடுகளை, உயர்கல்வி நிறுவனங்களில் தீவிரப்படுத்த வேண்டும்.இதுதொடர்பாக, பல்கலைகள், கல்லுாரிகளின் வளாகங்களில், அறிவிப்பு பலகைகள், விழிப்புணர்வு பதாகைககள் அமைக்க வேண்டும். கல்வி நிறுவனங்களின் இணையதளங்களிலும், உரிய தகவல்களை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.