UPDATED : பிப் 28, 2024 12:00 AM
ADDED : பிப் 28, 2024 08:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:
தேர்தல் வாக்குறுதிபடி சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள், ஈரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதிப்படி சம வேலைக்கு சம ஊதியம் நிறைவேற்ற வேண்டும். சென்னையில் போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களை கைது செய்யும் நடவடிக்கையை கண்டித்தும் நேற்று ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொருளாளர் கார்த்திக் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் சேகர் முன்னிலை வகித்தார். திருப்பூர் மாவட்ட செயலாளர் பால சுப்பிரமணியம் பங்கேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார், மாவட்ட துணை செயலாளர் கருப்பசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.