UPDATED : மார் 23, 2024 12:00 AM
ADDED : மார் 23, 2024 10:34 AM
புதுச்சேரி:
தேங்காய்த்திட்டு பச்சையப்பன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் விளையாட்டுப் போட்டியின் பரிசளிப்பு விழா, நடந்தது.ஆசிரியை விஜயா வரவேற்றார். அரசு மொழிபெயர்ப்பாளர் சுந்தர முருகன், சட்டசபை செயலகத்தின் அலுவலக கண்காணிப்பாளர் முருகன் ஆகியோர் விழாவை துவக்கி வைத்து, பேசினர். பள்ளி கவுரவ இயக்குநர் சரஸ்வதி, காஞ்சிமாமுனிவர் பட்டமேற்படிப்பு மைய முன்னாள் இயக்குநர் சீத்தா மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பதுருன்னிஷா வாழ்த்துரை வழங்கினர்.சட்டசபை முன்னாள் செயலாளர் மோகன்தாஸ், முன்னாள் வேளாண் இயக்குநர் பாலகாந்தி, சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். அறிவியல் கண்காட்சி மற்றும் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.ஆசிரியை லாவண்யா நன்றி கூறினார். நிகழ்ச்சியை, ஆசிரியை மேரி கிறிஸ்டின் தொகுத்து வழங்கினார்.