sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சி.எஸ்.கே., அதிகாரப்பூர்வ செயலியானது மின்மினி

சி.எஸ்.கே., அதிகாரப்பூர்வ செயலியானது மின்மினி

சி.எஸ்.கே., அதிகாரப்பூர்வ செயலியானது மின்மினி


UPDATED : மார் 23, 2024 12:00 AM

ADDED : மார் 23, 2024 10:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 23, 2024 12:00 AM ADDED : மார் 23, 2024 10:35 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ செயலியாக, மின்மினி மொபைல் போன் செயலி செயல்படத் துவங்கி உள்ளது.தமிழர்கள் அனைவரும், தேச எல்லையைக் கடந்து ஒன்று கூடும் சமூக வலைதள செயலியாக மின்மினி மொபைல் போன் செயலி செயல்படுகிறது. இந்த செயலி, சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ மொபைல் போன் செயலியாகி உள்ளது.இது குறித்து, மின்மினி ஆப் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னையில் சி.எஸ்.கே., அணி விளையாடும் ஐ.பி.எல்., போட்டிகள், ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகம் அளிப்பவை. அந்த மகிழ்ச்சியை பகிரும் வகையில், சி.எஸ்.கே.,யின் அனைத்து அறிவிப்புகளும், இந்த செயலியின் வாயிலாக வெளியிடப்படும்.அதேசமயம், ரசிகர்கள், சி.எஸ்.கே., அணி வீரர்கள், அவர்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்த கருத்துகளையும், வீடியோக்களையும் #minminiCSK என்ற ஹாஸ்டேக்குடன் பதிவிடலாம். அதில் சிறந்த வீடியோக்களை தேர்வு செய்து, அவற்றை பதிவிட்டோருக்கு பரிசுகள் வழங்கப்படும்.மிகச்சிறந்த வீடியோக்களை பதிவேற்றுவோருக்கு ஐ.பி.எல்., டிக்கெட்டுகளும் வழங்கப்படும். இதில், கன்டென்ட் கிரியேட்டர்கள், சிட்டிசன் ஜர்னலிஸ்ட்கள், மல்டி சேனல் நெட்வொர்க் குழுவினர், இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பால், தங்களின் கருத்துகளை உலக தமிழ் ரசிகர்களுடன் பகிரும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக, சி.எஸ்.கே., ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us