UPDATED : மார் 23, 2024 12:00 AM
ADDED : மார் 23, 2024 10:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக தொலைதுார மற்றும் இணையவழி கல்வி தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொலைதுார மற்றும் இணையவழி கல்வி முறையில் பயின்று, கடந்த ஆண்டு டிசம்பரில் தேர்வு எழுதியவர்களின் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை பல்கலை இணையதளமான https:/coe.annamalaiuniversity.ac.in/dde-results.php என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம். இத்தகவலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.