UPDATED : மார் 23, 2024 12:00 AM
ADDED : மார் 23, 2024 10:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை:
ஆயிபுரம் உயர்நிலைப்பள்ளி மாணவர் காவல்படையினர் நேற்று கிள்ளை போலீஸ் நிலையத்தில், களப்பணி மேற்கொண்டனர்.கிள்ளை போலீஸ் நிலையத்திற்கு நேற்று பரங்கிப்பேட்டை அடுத்த ஆயிபுரம் உயர்நிலைப்பள்ளி மாணவர் காவல்படையினர் களப்பணிக்காக வந்தனர். சப் இன்ஸ்பெக்டர் சங்கர், மாணவர்களுக்கு, போலீஸ் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும், பொதுமக்களுக்கு செய்துவரும் சேவைகள் குறித்து விளக்கி கூறினார்.நிகழ்ச்சியில், சப் இன்ஸ்பெக்டர் குப்புசாமி, தலைமை ஆசிரியர் ராஜன் தனிப்பிரிவு ஏட்டு முத்துக்குமார் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.