UPDATED : ஏப் 16, 2024 12:00 AM
ADDED : ஏப் 16, 2024 10:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்:
தமிழ்நாடு ஓவியர் சங்கம் சார்பில் நுாறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு சுவர் விளம்பரம் எழுதினர்.
தமிழகத்தில் வரும் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவு இலக்காக கொண்டு தேர்தல் ஆணையம் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு ஓவியர் சங்க, கடலுார் மாவட்டம் மற்றும் மாநகரம் சார்பில் மஞ்சக்குப்பம் மைதானம் கலையரங்கம், அண்ணா விளையாட்டு மைதான சுவர்களில் நுாறு சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு சுவர் விளம்பரங்கள் எழுதினர்.
இதில், ஏராளமான ஓவியர்கள் கலந்து கொண்டு தங்கள் சொந்த செலவில், பெயிண்ட் உள்ளிட்டவைகள் மூலம் சுவர் விளம்பரம் செய்தனர்.