UPDATED : மே 25, 2024 12:00 AM
ADDED : மே 25, 2024 12:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மீனம்பாக்கம்:
கோடைகால விடுமுறை முடித்து, ஜூன் மாதம் பள்ளிகள், கல்லுாரிகள் திறக்கப்பட உள்ளன. இதனால், மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் சரியான, முறையான இயங்கு திறனுடன் உள்ளதா என்பது குறித்து அறிய, சிறப்பு ஆய்வு முகாம் நேற்று நடத்தப்பட்டது.
ஆலந்துார் ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலக மைதானத்தில், ஆய்வு அலுவலர் சுந்தரமூர்த்தி, தாம்பரம் போக்குவரத்து ஆய்வாளர் சிராஜ் பாபு உள்ளிட்டோர் பங்கேற்று பள்ளி, கல்லுாரி வாகனங்களை ஆய்வு செய்தனர்.
மொத்தம் 137 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில், அவசர கால வழி, கேமரா, வேகக் கட்டுப்பாட்டு கருவி பழுது, அதிக சத்தம் எழுப்பியது உள்ளிட்ட காரணங்களால் ஒன்பது வாகனங்கள் தகுதியற்றவையாக நிராகரிக்கப்பட்டன.