UPDATED : செப் 18, 2024 12:00 AM
ADDED : செப் 18, 2024 08:57 AM
வால்பாறை:
வால்பாறையில், பழங்குடியின மாணவர்களுக்கு, பேக் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது.
வால்பாறை அடுத்துள்ளது அய்யர்பாடி ஜே.இ.,பங்களா. இங்குள்ள கவர்க்கல் பழங்குடியின கிராமத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பழங்குடியின தலைவர்கள் ராஜலட்சுமி, சிகாமணி ஆகியோர் தலைமையில் நடந்தது.
கல்லார்குடியை சேர்ந்த அனீஷ் வரவேற்றார். விழாவில், வால்பாறை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி கலந்து கொண்டு, 30 பழங்குடியின மாணவ, மாணவியருக்கு, ஸ்கூல் பேக், நோட்டு மற்றும் பாட புத்தகங்களை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, இன்ப்போசியஸ் சினேகம் அமைப்பு, கவர்க்கல் கிராம மக்கள் மகாத்மாகாந்தி மாலை நேர கல்வி மைய பொறுப்பாளர் பவித்திரா மற்றும் ஆனைமலை தோடர் பழங்குடியின தலைவர்கள் செய்திருந்தனர்.