UPDATED : அக் 28, 2024 12:00 AM
ADDED : அக் 28, 2024 12:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்:
குமாரபாளையம் அரசு கிளை நுாலகத்தில், வாசகர் வட்டம் சார்பில், தலைவர் பிரகாஷ் தலைமையில், வாசிப்பை நேசிப்போம்; கவிதை திருவிழா' என்ற தலைப்பில், அரசு நுாலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
வாசகர் ஜமுனா அனைவரையும் வரவேற்றார். பள்ளி மாணவர்கள், கவிதை சொல்லி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் கூட்டம் நடைபெறும் என கிளை நுாலகர் மாரியாயி தெரிவித்தார்.