தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ திறனறி தேர்வுக்கு மாதிரி தேர்வு

திறனறி தேர்வுக்கு மாதிரி தேர்வு

திறனறி தேர்வுக்கு மாதிரி தேர்வு


UPDATED : டிச 27, 2024 12:00 AM

ADDED : டிச 27, 2024 12:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 27, 2024 12:00 AM ADDED : டிச 27, 2024 12:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை:
அரசு பள்ளிகளில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வு நடக்கிறது. இத்தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு பள்ளி படிப்பை நிறைவு செய்யும் வரை மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், உடுமலை கிளை சார்பில் திறனறித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதிரி தேர்வு நடத்தப்பட்டது. உடுமலை மீனாட்சி திருமண மண்டபத்தில் நடந்த மாதிரி திறனறித்தேர்வில், 15 அரசு பள்ளிகளைச் சேர்ந்த, 46 மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்களுக்கு மனத்திறன், படிப்பறிவு திறன் உள்ளிட்ட இருபகுதிகளிலிருந்தும் வினாக்கள் தொகுக்கப்பட்டு தேர்வு நடந்தது. ஆசிரியர்கள் செல்லதுரை, ராதாகிருஷ்ணன், ஈஸ்வரசாமி, வேதநாயகி, ஜெயப்ரியா ஆகியோர் தேர்வை ஒருங்கிணைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us