UPDATED : ஜன 08, 2025 12:00 AM
ADDED : ஜன 08, 2025 08:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
டிரைவருக்கு வலிப்பு ஏற்பட்டதால், பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
கோவை மாவட்டம் மத்தம்பாளையம் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு, 32 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு தனியார் பள்ளி வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. டிரைவருக்கு வலிப்பு ஏற்பட்டதால், பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி அருகே வாகனம் விபத்தில் சிக்கியது.
இதில் பள்ளி வாகனத்தில் இருந்த குழந்தைகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. நல்வாய்ப்பாக எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை.

