UPDATED : பிப் 05, 2025 12:00 AM
ADDED : பிப் 05, 2025 08:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்:
சோழவந்தான் அருகே நகரி கல்வி சர்வதேச பொதுப்பள்ளியில் அமெரிக்க இரட்டை பட்டம் திட்ட அறிமுக விழா நடந்தது.
பள்ளித் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். தாளாளர் குமரேஷ் முன்னிலை வகித்தார். அமெரிக்கா அகாடமிகா இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் இயக்குனர்கள் ஆண்டரஸ் கலாவியா கொல்லா சோஸ், சுரேன் ராமசுப்பு துவக்கி வைத்தனர். அகாடமிகா 55 நாடுகளில் 50 ஆயிரம் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கி வருகிறது.
இத்திட்டம் மூலம் இந்திய மாணவர்கள், இந்திய உயர்நிலை, இரண்டாம் நிலை சான்றிதழுடன் கூடுதலாக அமெரிக்க பட்டத்தையும் பெறலாம். இதன் மூலம் நேரடியாக அமெரிக்காவில் கல்வி பயில வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர். பெற்றோர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடல் நடந்தது.