தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போலி கல்வி நிறுவனங்கள் யு.ஜி.சி., எச்சரிக்கை

போலி கல்வி நிறுவனங்கள் யு.ஜி.சி., எச்சரிக்கை

போலி கல்வி நிறுவனங்கள் யு.ஜி.சி., எச்சரிக்கை


UPDATED : மார் 21, 2025 12:00 AM

ADDED : மார் 21, 2025 09:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 21, 2025 12:00 AM ADDED : மார் 21, 2025 09:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி.,யின் செயலர் மணிஷ் ஜோஷி வெளியிட்டுள்ள அறிவிப்பு:

யு.ஜி.சி., சட்டப்படி, யு.ஜி.சி.,யால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் வழங்கும் படிப்பும், சான்றிதழும் மட்டுமே, உயர் கல்விக்கும், வேலை வாய்ப்புக்கும் தகுதியானவை.

ஆனால், நாட்டில் அங்கீகாரம் பெறாத போலியான கல்வி நிறுவனங்கள், கவர்ச்சியாக விளம்பரம் செய்து மாணவர்களை சேர்த்து, பட்டங்களை வழங்குகின்றன. இதனால், மாணவர்களின் முன்னேற்றமும், பெற்றோரின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது.

அதனால், போலியான நிறுவனங்கள், யு.ஜி.சி.,யால் அடையாளம் காணப்பட்டு, அவற்றின் பட்டியல், www.ugc.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

பட்டப்படிப்புகளில் சேரும் முன், மாணவர்களும், பெற்றோரும் அவற்றை அறிந்து, பாதுகாப்புடன் செயல்பட வேண்டும். போலி கல்வி நிறுவனங்கள் குறித்து தகவல் தெரிந்தால், ugcampc@gmail.com என்ற மின்னஞ்சலில் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us